Tuesday, 13 May 2014

நேற்று நான் ஒரு அரசு பள்ளிக்கு சென்றிருந்தேன், அலுவல் முடிந்தபின் ஒவ்வொரு ஆசிரியராக வீடு கிளம்பிகொண்டிருன்தனர். திடீரென்று தலைமை ஆசிரியர் ஒரு ஆசிரியையை அழைத்து சில மாணவர்களை காட்டி "இவர்களுக்கு ஒரு அரகட்டளையில் இருந்து கல்வி வுதவிதொகை கிடைத்துள்ளது. இவர்களுக்கு +1 மார்க் ஷீட் ரெடி பண்ணிடுங்க  " என்றார். அந்த ஆசிரியை புதியவர் அவருக்கு எப்படி எழுதுவது (ரெடி பண்ணுவது ) தெரியவில்லை. என்னிடம் ஒரு format எழுதி கொடுங்க சார் என்று கேட்டார். நானும் "this is certified that selvan ​​​ ___  has appeared in April 2014 and obtained the following  marks " என்று எழுதி கீழே சில கட்டங்களை வரைந்து அவர்களுடைய marks எழுதி pass / fail என்று கீழே HM sign போட்டு கொடுத்தேன்.

இதே ஒரு private institution என்றால் இதற்காகவே ஒரு format ரெடியாக system ல் வைத்திருப்பார்கள். marks மட்டும் fill up செய்து print out எடுத்து கொடுத்துவிடுவார்கள். ஆனால் அரசு பள்ளியில் எதுவும் இல்லை. அந்த ஆசிரியையை கிட்டத்தட்ட 6 மாணவர்களுக்கு ஒரே மாதிரி எழுதி கொண்டிருந்தார். நான் அவரிடம் இதை கம்ப்யூட்டரில் டைப் செய்து காப்பிகளை பிரிண்ட் போடலாமே என்றுபோது, கம்ப்யுட்டர் ஆசிரியர் உள்ளே வந்தார். இந்த மேடம் காப்பிகளை எழுதிகொண்டிருக்க, அவர் மாணவர்களிடம் கிட்டத்தட்ட அரைமணி நேரத்திற்கும் மேலாக அரட்டை அடிதுகொண்டிருந்தார், அந்த ஆசிரியை எழுதுவதையும் கிண்டல் அடிதுகொண்டிருந்தார். (ராமஜெயம் எழுதுகிறீர்கள என்றும், என்னடா பசங்கள அரகொட்டலையில் பணம் தராங்களா என்றும், மேடமே இன்னும் 20 பேருக்கு எழுதிகொடுப்பார்கள் என்றும் ). அருகில் இருந்த நான் அரைமணி நேரம் கழித்து "சார் இதை கம்ப்யுட்டரில் டைப் பண்ணி வைத்தால் மார்க்ஸ் மட்டும் என்டர் பண்ணி, பிரிண்ட் எடுத்துடலாமே " என்று சொல்லி முடிப்பதற்குள் அலையே காணோம். கிட்டத்தட்ட வாசலின் end க்கே போய்ட்டார். வாசலின் வெளியே சென்றுகொண்டே "செய்றதுக்கு ஆளு இல்லையே " என்றபடியே சென்று விட்டார்.
அப்பொழுதுதான் நினைத்தேன் அரட்டை அடிப்பதற்கும், கிண்டல் அடிப்பதற்கும் நேரம் இருக்கு, ஆனா இந்த 2 வரிகளை டைப் பண்ணி வைக்க நேரம் இல்லையாம் இந்த அரசு ஆசிரியர்களுக்கு.
ஆக வேலைக்கு செல்வது, sign பண்ணுவது, வேலைகளை செய்யாமல் அரட்டை அடிப்பது, ஒருசில வேலைகளை தட்டிகளிப்பது, இதுதான் இவர் போன்ற  ஆளுங்களுக்கு  வேலையே. (ஒரு சிலர் மாணவர்களுக்கு உதவும் நோக்கில் உதவி செய்கிறார்கள்.)
கடைசியாக நான் ஒருசில லட்டர்களில் இந்த கட்டம் வரைவது, மார்க் என்டர் செய்வது போன்ற உதவிகளை செய்துவிட்டு வந்தேன்.

No comments:

Post a Comment